சமுதாயக் கட்டுரைகள்-Articles

ஆன்மிக, தேசிய நீரோட்டத்திற்கு குடும்பம் எனும் வழிகாட்டும் பல்கலைக்கழகம் அ.பரிவழகன் – Spiritual, National integration via Family – Parivazhagan


விருதைத் திருப்பித்தருவேன், நாட்டை விட்டு வெளியேறுவேன் சகிப்புத்தன்மை ஒரு சாதாரண இந்தியனின் பார்வை அ.பரிவழகன் - Intolerance in India - Parivazhagan

http://parivazhagan.blogspot.in/2015/11/intolerance-in-india-parivazhagan.html


ஆங்கிலேயர்களால் "முன்னேற்றம்" என்ற ஏமாற்று வேலை - அ.பரிவழகன் [Britishers Progress in INDIA a Big Fake] 

http://parivazhagan.blogspot.in/2015/08/britishers-progress-in-india-big-fake.html 

"தீபாவளி" அரசியல் - அ.பரிவழகன் – Deepavali Politics 
http://parivazhagan.blogspot.in/2015/11/deepavali-politics.html 

நாட்டைக் கெடுக்கும் இரு பெரும் திருடர்கள் : மது, ஊழல் அ.பரிவழகன் - Two big thieves spoiling the nation : Alcohol and Corruption

நம் நாடு : தள்ளாடும் தலைமுறை அ.பரிவழகன்

தலைமைப்பண்பு : தன்னம்பிக்கை தந்த பரிசு அ.பரிவழகன் - Self Confidence & Leadership

தமிழ் நம் அடையாளம்! ஹிந்தி இன்றைய தேவை !

நாம் செய்யவேண்டிய "ஐந்து"

வேண்டும் "வேத அறிவியல்"

நம் பாரத நாடு, பழம் பெரும் நாடு !

பாரதம் எங்கள் தாய் நாடு ! INDIA is our NATION

மோடி ஏன் ஸ்ரீ மத் பகவத் கீதையைப் பரிசாகத் தர வேண்டும் ? Why Modi Gifted GITA to Obama ?

கடவுளின் பத்து அவதாரமும் (தசாவதாரம் ) "டார்வினின்" பரிணாம வளர்ச்சியும் ...(Dashavatara and Darwin)

சும்மாவா வீசிற்று சுதந்திரக் காற்று ?

ஹிந்து என்பது மதமல்ல, கலாச்சாரம் !

தமிழ் அறிவியல் மொழியாக வேண்டும் ! அரசும், நாமும் என்ன செய்ய வேண்டும் ?

கல்வி நம் விருப்பம், நம் உரிமை !இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் – நன்மை தீமைகள் – A.Parivazhagan

முன்னுரை

இலவசமாக வரும் பல இலவசத்திட்டங்களை நாம் பலரும் அறிந்திருப்போம். நம்மில் பலரும் இத்திட்டங்களின் மூலம் சிலவற்றைப் பெற்று இருக்கலாம். இன்றைய நவீன உலகத்தில் இந்தியா வளர்ந்து வரும் வேளையில் இது போன்ற திட்டங்கள் தேவைதானா ? இவை பலன் தருமா ? என்பன பற்றிய கட்டுரை இது. முதலில் இதன் பயன்கள் பற்றிக் காண்போம்

இலவசத்திட்டங்களின் நன்மைகள்:

இலவசத் திட்டங்களின் மூலம் ஓர் பொருளை அல்லது ஓர் வசதியை அனைவருக்கும் கிடைக்குமாறு செய்யலாம். பணக்காரர் முதல் பாமரர் வரை படித்தவர் முதல் படிக்காதவர் வரை அனைவருக்கும் சமமாக ஓர் சேவையை வாங்கலாம். ஏழைகளின் அன்றாட வாழ்வின் தேவைகளான இன்றியமையாத பொருட்களை இதனமூலம் இலவசமாக அவர்களுக்குக் கிடைக்குமாறு செய்யலாம். பாமரமக்களின் அன்றாட வாழ்வில் முக்கியத் தேவைகளான உணவு, உடை போன்றவற்றை இலவசமாக தருவதால் சில நாட்கள் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ வழி செய்ய முடியும்.

இலவசத் திட்டங்களின் நோக்கமே வாழ்க்கைத்தரத்தில் கீழ்நிலையில் இருக்கும் மக்களுக்கு அனைத்து இன்றியமையாத தேவைகளும் பூர்த்தியாக வேண்டும் என்பதே ஆனால் இன்று சில அரசியல் பிரதிநிதிகள் இதை அவர்களின் ஓட்டு வங்கியை நிரப்புவதற்காக தேர்தல் நேரங்களில் மட்டும் ஓர் ஆயுதம் போல் பயன்படுத்திக் கொள்கின்றனர்.”

இலவசத் திட்டங்கள் என்பது மக்களின் வாழ்க்கைத்தரம் உயர சிறு உந்து சக்தியாக பயன்படுகின்றது. இலவசமாக வாங்கப்படும் கல்வி ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றுவதாக அமைகிறது. இலவசமாக வாங்கப்படும் கல்வித் திட்டங்கள் நாட்டின் கடைக் கோடியில் இருக்கும் ஏழை மாணவர்களையும் பயன்படுகிற வைக்கிறது. ஆரம்ப பள்ளிகளில் இலவசமாக வாங்கப்படும் உணவு உடை புத்தகம் மாணவர்களின் வறுமை நிலையை சிறிதளவாவது குறைத்து பழக்கத் தூண்டுகிறது.

அவர்களின் வாழ்க்கைப் பயணம் ஒளிமயமாக அமைய நல்ல கனவுகள் காண ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் உதவுகின்றனர். தன்னைப் போன்று வறுமை நிலையில் இருக்கும் ஓர் மாணவன் நன்றாக தன்னம்பிக்கையுடன் படிப்பது கண்டு மற்ற மாணவர்களும் படிக்கின்றனர். இது ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும். பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ஊக்கத் தொகை மாணவனை தன்னம்பிக்கை இழக்காமல் படிக்கவைக்கிறது இனி வருங்காலங்களில் அரசால் இலவசமாக வழங்கப்படும் உடை ஏழை மக்களுக்கு ஓர் சிறிய உதவியாக அமைகிறது. தினமும் உழைத்தும் வறுமையில் வாடும் விவசாயிகள் மற்றும் பல தலித் தொழிலாளர்களுக்கும் வாழ்வில் பல ஏக்கத்துடனும் கண்ணீருடனும் வாடும் மக்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவசத் திட்டங்கள் சிறுஉதவியாக அவர்களின் ஏக்கத்தைப் போக்க உதவும்.
சில திட்டங்களும் பயன்களும் :

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி

தொலைக்காட்சிப் பெட்டியை நாம் சரியாக பயன்படுத்தினால் அது நமக்கு நல்ல பயனைத் தரும். தினமும் செய்திகள் பயனுள்ள நிகழ்ச்சிகள் (அறிவியல், கல்வி, பொருளாதாரம்) போன்றவற்றைப் பார்த்தால் நல்ல பயன்தரும். அதை விடுத்து முற்றிலும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளையே பார்த்தால் அது நம் நேரத்தைத் திருடிவிடும். தொலைக்காட்சிப் பெட்டி என்பது அற்புதமான அறிவியலின் மகத்தான கண்டுபிடிப்பு. அதை சரியான முறையில் பயன்படுத்த வெண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வாங்கப்படும் இருசக்கர வாகனம் (சைக்கிள்மிதிவண்டி) மாணவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மாணவர்கள் புத்தகப்பைகளைத் தூக்கிக் கொண்டு நடந்து செல்லாமல் மிதிவண்டியில் செல்வதனால் அவர்களின் வேலை பளு (சுமை) குறைந்துள்ளது. இது அவர்களைச் சோர்வடையச் செய்யாமல் படிக்க உதவும்.
கிராமங்களில் வறுமை நிலையில் வாழும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மின்சாரம் (விவசாயத்திற்காக) ஓர் பேருதவியாக அமைகிறது. மேலும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் விதைகள் உபகரணங்கள் (மானியம்) அவர்களுக்கு மிகுந்த உதவியாக துணையாக அமைகிறது. கோயில்களில் வழங்கப்படும் உணவு (அன்னதானம்) ஒரு வேலை உணவு கூட கிடைக்காத மக்களுக்குவரப்பிரசாதமாகஅமைந்துள்ளது. அவர்கள் தெருக்களுக்குச் சென்று பிச்சையெடுக்காமல் தடுக்கிறது. ஒரு மனிதன் சகமனிதனிடம் உணவிற்காக யாசகம் கேட்பது கொடுமை. இத்திட்டம் மூலம் இது குறைந்துள்ளது.
இவை சில இப்படியாக பல இலவச திட்டங்கள் மக்களின் முன்னெற்றத்திற்காக வழங்கப்படுகின்றன. இவை அந்த அந்த கால கட்டத்திற்கு ஏற்றாற் போல் புதிய வடிவம் பெற வெண்டும். நாட்டில் வறுமையை ஒழிப்பதற்காகவும், கல்வியை வளர்ப்பதற்காகவும் விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவும் போடப்பட்ட போடப்படுகின்ற இலவசத்திட்டங்கள் பல இவை அனைத்தும் முழு சக்தியுடன் மக்களைச் சென்று சேருமாயின் விரைவில் நம் நாடு வறுமையில்லாத வளமான நாடாக மாறிவிடும்.

அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையில் உண்மையாக நேர்மையுடன் முழு பயன் தரும் இலவசத் திட்டத்தை அரசு வழங்கினால் அதற்கு என்றும் மக்களிடம் வரவேற்பு இருக்கும்.”

இலவசத் திட்டங்களின் தீமைகள்

நம்நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் நம் மக்களின் படிப்பறிவு எழுத்தறிவு விகிதாச்சாரம் மிக குறைவாகவே இருந்தது. அந்த சமயத்தில் இலவசங்கள் வழங்கப்பட்டன. ஆனால் இன்று கல்வியின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. நம் மக்களிடம் படித்தோர் எண்ணிக்கை வளர்ந்து விட்டது. இதுபோன்ற சமயத்தில் இலவசம் என்று கூறி சில காலம் மட்டும் பயன்தரும் இலவச திட்டங்களைப் புகுத்த முடியாது. தரமற்ற பொருட்களை இலவசமாக வாங்கினால் மக்கள் எளிதில் அதைக் கண்டுபிடித்து விடுவர். எனவே தவறான இலவச திட்டங்களை இப்பொழுது மக்கள் முன் கொண்டு செல்ல முடியாது.

இலவச திட்டங்களின் மீது சொல்லப்படும் முதல் குற்றச்சாட்டு அவை சோம்பெறித்தனத்தை வளர்க்கும் என்பது இலவசதிட்டங்கள் தொடர்ந்து வருவதால் அனைவருமே அதை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். பின் இது "வரமாக" மாறிவிடுவதால் அனைத்தும் இலவசமாக கிடைக்காத என்ற ஏக்கம் இதன் விளைவும் உழைக்க மறுப்பது இதன் தாக்கம் இன்று தேர்தல் நேரங்களில் பணத்திற்காக தங்கள் ஓட்டுகளையும் மக்கள் விற்கும் அளவிற்கு வளர்ந்து விட்டது.
இலவசமாக வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருக்கின்றனவா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். மிக குறைந்த விலைக்கு வழங்கப்படும் அரிசியின் தரம் மிக குறைந்துள்ளது. இதுபொன்று மலிவு விலையில் தரமற்ற பொருட்களைத் தருவதன் மூலம் மக்களின் வாழ்க்கை முறையைக் கீழ்நிலைக்குக் கொண்டு செல்கின்றனர். விளைவு உடல் நிலையிலும் மனநிலையிலும் குறைபாடு என்று பாதிக்கப்படுகின்றனர். ஒருமுறை ஓர் திட்டமோ ஓர் வசதியோ ஓர் பொருளோ இலவசமாக கிடைத்தால் நாம் அதை மீண்டும் மீண்டும் இலவசமாகவே எதிர்ப்பார்க்கிறொம். இது சாதாரணமாகவே மக்களின் மனநிலையாகவே மாறிவிடுகிறது. இலவசமாக வரும் திட்டங்களை நாம் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புண்டு. ஏழை எளியோர்களிடம் தேர்தல் நேரங்களின் ஓட்டு வாங்குவதற்காக அரசியல் தலைவர்களால் கூறப்படும் பல இலவச திட்டங்கள் இன்றும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. மேலும் சில அரசியல் பிரமுகர்கள் பணத்தையும் இலவசங்களையும் காரணம் காட்டி பாமரமக்களை தவறான வழிகளில் பயன்படுத்துகின்றனர். இது போன்ற இலவசத்திட்டங்கள் அனைத்தும் உரியவர்களுக்குத்தான் (ஏழை மற்றும் நடுத்தர மக்கள்) சென்று சேர்கின்றதா என்று தெரியவில்லை. அரசாங்கம் பொடும் பல இலவச திட்டங்கள் அரசியல்வாதிகளால் தங்களுக்கு ஏற்றார்பொல் மாற்றப்படுகின்றன. விளைவு அவர்கள் தங்களுக்கு நெருங்கியவர் தெரிந்தவர்களுக்கு அதிக பலன் கிடைக்குமாறு செய்கின்றனர். சமமாக பலன்கள் பயன்கள் மக்களைச் சென்று செர்வதில்லை.
பெயரளவில் மட்டும் கவர்ச்சிகரமாக வரும் இலவச திட்டங்கள் நம் சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை ஒன்று ஏற்படுத்தவில்லை. இன்னும் கிராமங்களில் குடிசைகள் குடிசைகளாகவே இருக்கின்றன. கிராமங்களில் மக்கள் அடுப் பெரிக்க

விறகுகளைத் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கின்றனர். ஏன் இன்னும் சென்னையிலும் நம் நாட்டின் தலைநகரான புதுதில்லியிலும் குழசைகளும் சேரிப்பகுதிகளும் அதிகமாகவே முன்னெற்றம் அடையாமல் இருக்கின்றன. எல்லா நேரங்களிலும் வறுமை அவர்களின் வீட்டு வாசலில் உள்ள கோலமாகத் தினம் தினம் புதிய வடிவம் எடுத்து மாறாமல் இருக்கிறது.

தனிமனிதன்

ஒருவர் உழைக்க மறுத்து இலவசங்களில் வாங்கி விடுவாராயின் அதுவே அவரின் குழந்தைகளுக்கு ஓர் தவறான பாடமாக மாறிவிடும். அவருக்குப் பின்வரும் தலைமுறையும் வறுமையின் பிடியில் வாழநேரிடும். இன்று வாழ்க்கையில் முன்னெறி அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ள பலரும் தங்கள் உழைப்பை மதித்துள்ளனர். முதலீடாக உழைப்பை விதைத்துள்ளனர். இலவச திட்டங்கள் மீது அவர்களின் நாட்டம் செல்லவில்லை. இலவசங்களைப் பெரிதும் நம்பியவர்கள் இன்றும் வாழ்க்கை யென்ற ஏணிப்படியில் ஏறிச்செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இலவசமாக வரும் திட்டங்கள் சில காலம் மட்டுமே பயன்தரும் அதனால் பெரிய மாற்றம் எதுவும் நடந்து விடாது. “நமது உழைப்பு என்பது தெளிந்த நீரோடை போன்று இருத்தல் வேண்டும். தொடர் உழைப்பால் மட்டுமெ நம் வெற்றி நமக்குக் கிடைக்கும். மின் மினிப்பூச்சி போல் வரும் இலவசங்கள் சில மணிநேரத்தில் ஒளி இழந்து விடும்.”
இந்த நவீன காலத்தில் மக்களைத் தவறான ஓர் திட்டம் காட்டி ஏமாற்ற முழயாது. பயனற்ற வார்த்தைகளில் மட்டும் சிறப்பு கொண்ட இலவச திட்டங்களால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைத்து விடப் போவதில்லை. முன்பு ஒரு காலத்தில் இன்றியமையாததாக இருந்த இலவச திட்டங்கள் இன்று பயனற்று விட்டன. அரசியல் தலைவர்களால் அவை தவறான பாதையில் மாற்றி விடப்பட்டுள்ளன.
உழைப்பை மட்டும் நாளும் நினைக்கும் பல

மனிதர்கள் இலவசம் பற்றி நினைப்பதில்லை.

இலவசம் பற்றியெ நினைக்கும் சிலர்

உழைக்க விரும்புவதில்லை.”

எனவே இலவசத்திட்டங்களுக்குத் தேவை கட்டுப்பாடு !
முடிவுரை

இந்த காலக்கட்டத்தில் இலவச திட்டங்கள் என்பது இன்றியமையாதது என்று கூறமுடியாது. அதே சமயம் இன்றியமையாத பொருட்களை உரியவர்களுக்கு (ஏழை நடுத்தர மக்கள்) வாங்க சில திட்டங்கள் தேவை அவை அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் இருந்து மெல்ல எழுந்துவர உதவியாக இருக்கும். அப்படி வழங்கப்படும் திட்டங்கள் நேர்மையுடனும் கட்டுப்பாடுடனும் சரியான வரையரையுடனும் பாதுகாப்புடனும் செயல்பட வெண்டும். அவை உரியவர்களுக்கு சரியான முறையில் சென்று சேர வெண்டும்.
_________________________________________________________________________________


No comments:

Post a Comment