Mission

பரிவழகன்   
அன்பான சகோதர / சகோதரிகளே வணக்கம்!

நோக்கம்... நான் ஏன் பேச்சாளன் ஆனேன் ?
  • தமிழ் இலக்கிய வளங்களை உலகறியச் செய்தல்.
  • நம்முடைய இளையசமுதாயத்திடம் தேசிய சிந்தனையை வளர்த்தல்.
  • தன்னுள் இருக்கும் தன்னம்பிக்கையை வளர்த்தல்.

இந்த அவசரமான வாழ்க்கையில் நம் நாட்டு இளைய தலைமுறை பல இன்னல்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றது. இன்றைய நம் இளைய தலைமுறையின் வளர்ச்சி தான் நம் நாட்டின் வளர்ச்சி,இன்று நம் மாணவனும்-மாணவியும் ,யுவனும்-யுவதியும், தங்களுடைய வளர்ச்சிக்காக எதிர்கால வெற்றிக்காக பல வகையில் பாடுபடுகின்றனர், ஓயாது முயற்சி செய்ன்றனர்...

நம் சமூக சூழலானது பல சிக்கல்கள் கொண்டது இன்று நவ நாகரீக யுவனும்-யுவதியும் தீயின் நடுவில் பஞ்சு போல வாழ்ந்து வருகின்றனர்அதாவது பல தீமைகளின்,கெட்டபழக்கங்களின் நடுவே வாழ்ந்து வருகின்றனர். நாம் அவர்களை சரியான பாதையில் திருப்பி விட்டால் இந்த நாடே சிறப்பாக ஒளிரும்... 

இன்று நாளிதழ்களில் வரும்  பல செய்திகள்  நம் மனதை பதற வைக்கின்றன...
பல மாணவனும்-மாணவியும் ,யுவனும்-யுவதியும், சில அற்பமான நிகழ்விற்காக,விஷயத்திற்காக, மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்...இன்னும் பல... இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் நம்  இளைய தலைமுறையிடம் தன் மீது நம்பிக்கை (தன்னம்பிக்கை) இல்லாததே...தன்னால் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை மனபாங்கு குறைந்து விட்டது. விளைவு பல இன்னல்கள்...

இந்த இன்னல்களை குறைக்க என்னால் ஆனா முயற்சியாக என் பேச்சு அமையும் என்று நான் நம்புகிறேன்...என்னுடைய பேச்சானது நம் நாட்டு இளைய தலைமுறைக்கு புதிய உற்சாகத்தையும், புத்துணர்வையும், தன் மீது முழு நம்பிக்கையும் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்...

ஓர் இளம் தமிழ் பேச்சாளராக என்னால் ஆனா சேவைகளை இச் சமூகத்ற்குச் செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன்...

உங்களின் அன்போடும் ஆதரவோடும்...



நன்றி...

No comments:

Post a Comment