Saturday 12 September 2015

சனாதன தர்மம் - 5 - பாரதத்தின் சாதிய முறை – 2 – Caste System in India – 2 - அ.பரிவழகன்

நம் நாட்டைச் சீர்திருத்தம் செய்ய நினைத்தவர்கள் எல்லாம் இந்து மதத்தையே குறை கூறினார், காரணம் இந்து மதம் சாதியை நம்புகிறதாம் இந்து தர்மம் போதித்த வர்ண கோட்பாட்டிற்கும், சாதிய முறைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இந்து தர்மம் நான்கே நான்கு வர்ணங்களை மட்டுமே போதிக்கிறது, ஆனால் இன்று நம்மிடம் இருக்கும் சாதிகள் எத்தனை ? இன்று நம் பாரத நாட்டில் ஆயிரக்கணக்கில் சாதிகள் இருக்கின்றன, இதற்கு இந்து தர்மம் காரணமல்ல, மனித மனோபாவமே காரணம்.

இந்து மதமே அனைத்து அவலங்களுக்கும் காரணம் என்றவர்கள் எல்லாம் இன்று இருக்கும் இடம் தெரியவில்லை, நாம் அனைவரும்பழமையான வேத காலத்திற்குத் திரும்ப வேண்டும், பரதத்தாய் மீண்டும்   உயர்த்தெழுவாள்” என்று முழங்கிய சுவாமி விவேகானந்தரை நாடே போற்றுகிறது.     

இன்று இந்து மதத்தைக் குறை கூற வேண்டும் என்பவர்கள் முதலில் சொல்வது அதன் சாதிய அமைப்பை, இன்று இருக்கும் இந்துக்களில் பெரும் பகுதியானவர்கள் வேதங்களைப் படித்தது கூடக் கிடையாது, இதற்கு முன்னர் நம் நாட்டில் வாழ்ந்தவர்கள் பலரும் வேதங்களைப் படித்து அதன்படி வாழ்ந்தனர் என்றும் கூற முடியாது. இப்படி இருக்க வேதங்களையே படிக்காத இந்து, பின்பற்றாத இந்து எப்படி வேதம் கூறியபடி சாதிப்பாகு பாடு படி வாழந்தான் ? வேதமா அவனைச் சாதியை உருவாக்கத் தூண்டியது ?            
மனிதனால் அவன் வாழும் இடங்களில் அவனவனின் வசதிக்கேற்ப அவனால் உருவாக்கப் பட்டதே சாதி ! ஒரு குழுவான மக்கள் ஒரு இடத்தில் வாழும் பொழுது ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்து வருகின்றனர் , ஆகையால் அக்குழுவிற்கு ஒரு பெயர் வருகிறது, பின்னாட்களில் அவர்களின் குடும்பமும் அத்தொழிலைச் செய்துவர அதுவே ஒரு அடையாளப் பெயராக மாறி விடுகிறது.

ஒருவர் ஒரு குழுவில் இருந்து ஒரு தொழிலைச் செய்கிறார் பின் அவர், அவரது வாரிசுகள் வேறு ஒரு தொழிலைச் செய்கின்றனர் என்றால் அடையாளப் பெயர் மாற வேண்டுமே இல்லையா ? ஒரு தொழில் செய்த குடும்பம் வேறு ஒரு தொழிலில் இறங்கும் பொழுது, அவர்களின் பரம்பரை வந்த வழியில் அவர்களுக்கு இருக்கும் பெயர் ஒரு அடையாளமாக இருப்பதால் அவர்களால் அவர்களின் அடையாளப் பெயரை மாற்ற முடிவதில்லை. இது பொதுவான ஒரு நியதி  , இது உலகம் முழுவதும் பொருந்தும்.

சாதியை ஒழிக்க இன்று இருக்கும் ஒரே வழி நாம் அனைவரும் எந்த சாதியையும் சாராதவர் என்று கூறிக்கொள்வதே.

"சாதிய உருவாக்கத்திற்கு மனித மனோபாவமே காரணம் ;
இந்து சனாதன தர்மத்தின் கோட்பாடல்ல

எனவே இந்து மதம் தான் எல்லோரையும் பிறப்பின் அடிப்படையில் பிரிக்கிறது என்ற வாதம் இனியும் எடுபடாது.


இந்து தர்மம் அரவனைக்கும் தர்மம், ஒதுக்கும் மதமல்ல
வேடனான குகனையும்
வானரனான சுக்ரீவனனையும்
அசுரனான வீடனனையும்
தம் தம்பியராக்கிய "ஸ்ரீ ராமன்" பிறந்த கலாச்சாரம் நம் பாரத கலாச்சாரம்!
இது பார் போற்றும் பண்பாட்டுத் தலைநகரம் 

No comments:

Post a Comment