Wednesday 16 September 2015

Happy Shri Vinayagar Chathurthi Wishes (17.09.2015) ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகள் ...



ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறைப் போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே!
                                - திருமூலர் திருமந்திரம் 

விநாயகப் பெருமானை எப்போதும் நமது புத்தியில் வைத்து வணங்க வேண்டும். நல்ல புத்தியைக் கொடுப்பார். நம்மை வழிதவறிப் போக விடமாட்டார். நீங்கள் மாணவர் என்றால் படித்தவை அப்படியே உங்களுடைய  புத்தியில் தங்கச் செய்வார். மறந்துபோகும்படி விட்டு விடமாட்டார்

Saturday 12 September 2015

சனாதன தர்மம் - 5 - பாரதத்தின் சாதிய முறை – 1 – Caste System in India – 1 - அ.பரிவழகன்

இந்த கலாச்சாரம் யார் மீதும் வலுக்கட்டயமாக எதையும் திணித்ததில்லை , ஒரு விஷயத்தைத் தவிர அது சாதி ! இந்து தர்மம் , சனாதன தர்மம் எப்பொழுதும் மனிதனை பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்தி ; பிரித்து பார்த்ததில்லை அது அவனின் குணத்தின் அடிப்படையில் ;  செய்யும் தொழிலின் (செய்யும் செயல், கர்மம்) தன்மைக்கேற்ப நான்கு வர்ணங்களை கூறுகிறது. காலப்போக்கில் அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கத்திற்கு காரணமாக மாறியது காலத்தின் கொடுமையே ஒழிய இந்த கலாச்சாரத்தின் பிழையல்ல.
ஒரு குறிப்பிட்ட மனிதர்கள் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த கலாச்சாரதையும் குறை கூறுவது வேடிக்கை.

"இது மனித பிழை; பரமாத்மாவின் பிழையல்ல"

தன்னுடைய பத்து அவதாரத்தில் ஒரே ஒரு அவதாரம் மட்டுமே கடவுள் (ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா) பிராமணன் வடிவம் எடுத்துள்ளார், அதுவும் குள்ளமான வாமண அவதாரம். மனிதனாக அவதரித்த மற்ற அனைத்து அவதாரமும் பிராமணன் அல்லாத அவதாரமே !  (இங்கு பிராமணன் என்பது உலக வழக்குப்படி ஒரு சாதியாக எடுத்துக்கொள்ள வேண்டும்)

இன்று உலக வழக்குப்படி பிராமணன்  என்பது ஒரு குணமாகப் பார்க்கப்படாமல் ஒரு சாதியாகப் பார்க்கப்படுகிறது, எனவே இனி பிராமணன் என்பதை ஒரு சாதியாக வைத்தே தொடர்வோம் ...

ராமனும் ; கண்ணனும் பிராமணன் அல்ல !

பராசரர் என்ற முனிவருக்கும் ; ஒரு மீனவக் குலப் பெண்ணிற்கும் (சத்யவதி) மகனாகப் பிறந்தவரே வேத வியாசர், (வேதங்கள் அனைத்தையும் தொகுத்தவர்) இவருக்குக் கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயரும் உண்டு, அதற்கு கருப்பு நிறத்துடன் தீயில் தோன்றியவர் என்று பொருளாகும். வேத வியாசர் எழுதியதே மஹா பாரதம்,18 மகா புராணங்கள், பிரம்ம சூத்திரம் போன்ற அற்புத படைப்புகள் ! ஆக வேதங்கள் அனைத்தையும் தொகுத்தவர் ஒரு பிராமணர் அல்லாதவர்.

ஆழ்வார்களிலும் ; நாயன்மார்களிலும் பலர் பிராமணர் அல்லாதவர்கள்

ரத்னாகர் என்ற கொள்ளைக்காரன் நாரத முனிவரின் அருளால், ஆசியால் , ஸ்ரீ ராமபிரானின் நாமத்தை "மராமரா" என்று உச்சரித்து (ராம ராம - அவனுக்கு ராம என்ற சொல் உச்சரிக்க வரவில்லைஸ்ரீ ராமனின் அருள் பெற்று , பின்னாட்களில் மிக உயர்ந்த "வால்மீகி" முனிவராகி இவ்   உலகத்துக்குக் கொடுத்த மாபெரும் கொடைதான் "இராமாயணம்". அந்த ராமனின் சரிதத்தை இந்த உலகுக்குக் கொடுத்தவர் ஒரு பிராமணன் அல்லாத வால்மீகி முனிவர்.

நம் இந்து சனாதன தர்மத்தில் மிக உயர்ந்த முக்கிய நூல்களை இயற்றிய அனைவரும் பிராமணர் அல்லாதவர்களே ! இதில் இருந்து நமக்கு ஒரு உண்மை விளங்குகிறது, முற்காலத்தில் வேதங்களை, இதிகாசங்களை அனைவரும் படித்துள்ளனர், அனைவரும் அதை வளர்த்துள்ளனர், குறிப்பிட்ட சாதியினர் மாட்டுமே படிக்க முடியும் என்ற நிலை இல்லை, இந்த நிலை இடையில் சாதிய பாகுபாடு பார்க்கும் காலத்தில் வந்திருக்கலாம், ஆனால் பழைய வேத காலத்தில் சாதிய வேறுபாடு இல்லை. "சாதிய வேறுபாடு ஒழிய அனைவரும் வேத காலத்திற்கு திரும்ப வேண்டும்" என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஆண்கள், பெண்கள் அனைத்து சாதியினரும் நம் பாரத நாட்டின் வேதங்களைப் படித்துள்ளனர். ஸ்ரீ மத் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள நான்கு வர்ண (பிராமணர்,ஷத்ரியர்,வைசியர்,சூத்திரர்) கோட்ப்பாடு அவரவர் குணத்தையும், அவரவர் செய்யும் தொழிலையும் அடிப்படையாகக் கொண்டது இதில் பிறப்பின் அடிப்படையில் சாதிப் பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஸ்ரீ மத் பகவத் கீதையின் வழியில் மனிதனின் குணத்தை, தொழிலைப் பார்த்து (செய்யும் செயல், கர்மம்) வர்ணங்கள் அமைகின்றன. மனிதனின் பிறப்பைப் பார்த்து சாதி கூறும் அவலம் உருவாகி மனிதனைக் கூறு போட்டதற்கு கடவுள் காரணமா ? ஸ்ரீ மத் பகவத் கீதையில் சாதி என்ற பதத்தை, சொல்லை ஸ்ரீ கிருஷ்ணர் பயன்படுத்தவே இல்லை !

தவறுகள் அனைத்தையும் மனிதன் செய்து விட்டு "கண்ணனை" நோக்கிக்  கை காட்டுவது மனித இயல்புதானே

சாதிய பாகுபாட்டிற்கு மனிதனே காரணம், இந்தக் கலாச்சாரமல்ல, நம் கலாச்சாரம் அனைவரையும் அரவனைக்கும் தன்மை கொண்டது, எல்லோரையும் "தெய்வம்" என்று கூறுவது. சகிப்புதன்மை என்ற ஒன்றை நம் தர்மம் நம்புவதில்லை, அதற்குப் பதில் அனைவரையும் அன்பால் அரவனைக்கும் "அனைவரையும் உயர்ந்த மனதோடு எற்றுக்கொள்ளுதல்" என்ற பரந்துபட்ட ஞானத்தை வழங்குகிறது. விரும்பியும், விரும்பாமலும், வேண்டியும், வேண்டாமலும், இயங்குவது சகிப்புதன்மை. ஆனால் வேண்டியவர், வேண்டாதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரர் என எதையும் பார்க்காமல் அனைவரையும் உயர்ந்த மனதோடு அன்பால் அரவனைப்பதே நம் இந்து சனாதன தர்மம்

சனாதன தர்மம் - 5 - பாரதத்தின் சாதிய முறை – 2 – Caste System in India – 2 - அ.பரிவழகன்
http://parivazhagan.blogspot.in/2015/09/5-2-caste-system-in-india-2.html