Sunday 19 July 2015

சனாதன தர்மம் - 4 - அன்னியர் ஆட்சியில் உருவான பெண் அடிமைத்தனம் – Status of Women Before Independence - அ.பரிவழகன்


பொதுவாகவே நம் பாரத தேசத்தில் பெண்கள் தொடர்ந்து அடிமைப் படுத்தப்பட்டு வந்தனர், "இங்கு பெண்களுக்கு உரிமையே இல்லை" என்பன போன்ற பொய்ப்  பிரச்சாரங்கள் தொடர்ந்து செயப்பட்டு வருகின்றன. இது தவறு. ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வந்தனர், வருகின்றனர்.

நம் நாட்டில் மகாராணி என்பவள் மகாராஜாவின் அருகிலேயே "சரி சமமாகவே" தான் அமர்ந்திருபாள்.

ஸ்ரீ ராமன் வர வேண்டாம் என்று மறுத்தும் அதை மீறி தன் சுய விருப்பத்தின் காரணமாக; தன் சுய முடிவலேயே ராமனோடு காட்டிற்குச் சென்றால் சீதை ! மேலும் காட்டில் ராமனுக்குப் பல அறிவுரைகளைச் சீதை வழங்கினாள் என்கிறது ராமாயணம்.

ஒரு நாட்டினுடைய மன்னனையே எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமை, தைரியம் கண்ணகிக்கு இருந்தது.

ஒரு நாட்டில் இளவரசிக்குத் திருமணம் என்றால், பல நாட்டு இளவரசர்கள் வரிசையாக வந்து நிற்பார்கள், தன் சுய விருப்பத்துடன், உரிமையுடன் தனக்கு விருப்பமான இளவரசனைக் கணவனாகத் தேர்ந்தேடுப்பாள் இளவரசி !   

குருகுலங்களில் சிறுவர்களும் ; சிறுமியர்களும் சேர்ந்தே கல்வி கற்றனர்.
கண்ணனின் தேரோட்டியாக ருக்குமணி இருந்திருக்கிறாள் , தசரதனுடன் சேர்ந்தே போருக்குச் சென்றாள் கைகேயி.

வடக்கே ஜான்சி ராணி என்றால் தெற்கே வீரமங்கை வேலுநாட்சியார், முதல் பெண் தற்கொலைப் படை வீராங்கனை குயிலி. இப்படி இந்தப் பட்டியல் நீளும்.       

ஆனால் இவையெல்லாம் வேண்டுமென்றே இன்று மறைக்கப்பட்டு நம் நாட்டில் பெண்களின் நிலை முன்பு மோசமாகவே இருந்தது போல ஒரு தோற்றம் காண்பிக்கப்படுகிறது.   

"பெண்கள் கல்வி பெறுவதை எங்கள் மதம் ஒரு போதும் தடுப்பதில்லை இன்ன வகையில் கல்வி அளிக்க வேண்டும் , ஏன் இன்ன வகையில் பயற்சி அளிக்க வேண்டும் என்பதெல்லாம் கூறப்பட்டுள்ளது பல்கலைகழங்களில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே படித்தனர் என்று பழைய நூல்கள் சொல்கின்றன, பின்னாட்களில் கல்வி நாடு முழுவதும் புறக்கணிக்கபட்டது, அன்னியர் ஆட்சியில் என்ன எதிர்பார்க்க முடியும் ? நாட்டை வென்ற அந்நியர்கள் அன்னியர்கள் எங்களுக்கு நன்மை செய்வதற்காக அங்கே இருக்கவில்லை. அவர்களுக்கு வேண்டியது பணம் அவ்வளவுதான்."  
Source : "இந்தியப் பெண்மணிகள்" - சுவாமி விவேகானந்தர்  ("இந்தியப் பெண்மணிகள்- 2 – பகுதி 2ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு.

நம் பாரத தேசத்தில் பெண்களின் நிலை மோசமடைந்தது, அன்னிய படையெடுப்புகளின் பின்பு தான். அன்னிய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து, தங்களின்  மகள்களை ; மனைவிகளை ; பெண் குழந்தைகளைப் காப்பாற்றிக்கொள்ள பெண்களை வீட்டிலேயே வைத்திருக்கும் முறையைக் கையாண்டனர், ஆண்கள். ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல அன்னியப் படையெடுப்புகள் தொடர்ந்தது 700 ஆண்டுகளுக்கும் அதிகமாக, ஆக அத்தனைக் காலங்கள் நம் பெண்கள் வீடுகளில் பயந்து, ஒடுங்கி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதுவே பின்னாட்களில் பெண் அடிமையாக ; பெண்ணடிமைத்தனம் ஊடுருவ  வழியாகிவிட்டது.
பெண்ணடிமைத் தனத்திற்கும் நம் கலாச்சாரத்திற்கும் சம்மந்தம் இல்லை.

அன்னிய ஆக்கிரமிப்பாளர்களால் எத்தனையோ பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகினர், கற்பழிக்கப்பட்டனர் , கொலைசெய்யப்படனர், இதையெல்லாம் பார்த்த ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பப் பயந்தனர், எத்தனையோ பெண்கள் தங்கள் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள தெருக்களில் , ஊர்நடுவில் தீ மூட்டி ஒன்றாக அதில் குதித்து தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர், இதுவே பின்னாளில் 'சதி'யாக மாறியதே (Sati Practice)  தவிர, இங்கு 'சதி' (Sati Practice) என்ற முறை இந்து மதத்தில் இருந்து வந்ததல்ல. ஆக்கிரமிப்பாளர்களின் கொடுமையால்  உருவானதே "சதி (Sati)" !

அன்னியரின் கையால் சீரழிவதைவிட தன் சொந்தக் கனவரின் கையால் மரணத்தைத் தழுவுவதே மேல், என்று கனவனின் கையாலேயே தன்னைக் கொலை செய்யச் சொல்லி உயிர் தியாகம் செய்த பெண்களின் வரலாறும் இங்கு உண்டு.  

உதாரணங்கள்  இரண்டு  :
1.       சித்தூர் ராணி பத்மினி :
வட பாரதத்தில் முகமதியப் பேரரசு உருவாகி வளர்ந்தது. அப்போது "சித்தூர் ராணி பத்மினி" அழகு நாடெங்கும் பிரபலமாக இருந்தது. அது சுல்தானின் காதுகளுக்கு எட்டியது. உடனடியாக அவளைத் தனது அந்தப்புரத்திற்கு அனுப்புமாறு கடிதம் அனுப்பினான் சுல்தான். அதன் விளைவாகச் சித்தூர் மன்னனுக்கும் சுல்தானுக்கும் மூண்டது மாபெரும் போர். முகமிதியர்கள் சித்தூரை முற்றுகையிட்டனர். இனி எதிர்த்துப் போரிட முடியாது என்று கண்ட ராஜ புத்திரர்கள் தங்கள் வாளால் தங்களையே வெட்டிக் கொண்டு மாண்டார்கள். பெண்கள் தங்களை தீக்கு இரையாக்கி உயர் தியாகம் செய்தனர்.

ஆண்கள் அனைவரும் மாண்ட பிறகு, தெருவில் எழுந்தது ஒரு மாபெரும் நெருப்பு, ராணியே தலைமை தாங்கிச் செல்ல, ஏராளம் பெண்கள் அந்த நெருப்பைச் சுற்றி வந்து கொண்டிருந்தனர்.அவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட சுல்தான் சென்று ராணியைத் தடுத்தான், அதற்கு ராணி "இதுதான் ராஜபுத்திரப் பெண் உனக்குக் கொடுக்கும் வரவேற்பு" என்று கூறி விட்டுத் தீயில் பாய்ந்தாள்முகமதியர்களிடமிருந்து தங்கள் கற்பைக் காத்துக்கொள்ள அன்று 74,500 பெண்கள் அந்தத் தீயில் வீழ்ந்து உயர்த்தியாகம் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. இன்றும் நாங்கள் கடிதம் எழுதும் போது, கடிதத்தை மூடி அதன் மீது “741/2என்று எழுதிவிட்டால், அதை யாராவது (அனுமதி இல்லாமல்) திறந்தால், 74,500 பெண்களைக் கொன்ற பாவத்திற்கு ஆளாகிறான்.              
Source : "இந்தியப் பெண்மணிகள்" - சுவாமி விவேகானந்தர் 
 (பகுதி 8 லட்சியப் பெண்மணிகள்) ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு.

2.   வார்விக் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் அர்னால்ட் தெற்காசிய வரலாற்றை பயில்பவர். அவர் இந்த காலகட்டம் குறித்து ஒரு சித்திரத்தை விவரிக்கிறார். அதில் அவர் சொல்வது என்ன? பூனாவிலும் பம்பாயிலும் பிளேக் சோதனைக்காக வீடு வீடாக ஏறிய பிரிட்டிஷ் வீரர்கள் இந்தியர்களை ஏதோ விலங்குகள் போல தாக்கினர். இது  மக்களிடையே கடும் வெறுப்பை ஏற்படுத்தியது. பூனா நகரத்தைப் பொறுத்தவரையில் அந்த நகரத்தில் எப்போதும் பிரிட்டிஷ் எதிர்ப்பு கிளர்ச்சிகள் இருப்பதால் அங்கே உள்ள மக்கள்  தாம் வேண்டுமென்றே அவமானப்படுத்தப்படுவதாக உணர்ந்தனர். இதில் நியாயம் இல்லாமல் இல்லை   அது மட்டுமல்ல பிரிட்டிஷ் ராணுவத்தினரால் இந்திய பெண்கள் மானப்பங்கப்படுத்தப்பட்டனர். கிராமமக்களோ ராணுவத்தினரால் அடித்து துன்புறுத்தப்பட்டனர். ராணுவத்தினர் காடுகளுக்கு வேட்டையாட செல்லும் போது இந்திய கிராம மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கேட்டால்ஏதோ காட்டு மிருகம் என தவறாக நினைத்து சுட்டுவிட்டோம்.’ என பதில் கிடைக்கும். இதற்கெல்லாம் பிரிட்டிஷ் ராணுவத்தினருக்கு மிக அற்பமான சில தண்டனைகளே கொடுக்கப்பட்டன. பூனாவில் வீடு வீடாக பிளேக் சோதனை செய்ய ஆயிரம் ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டதுஒன்று திட்டமிட்ட தூண்டுதல் அல்லது இந்தியர்களின் உணர்வுகளை வேண்டுமென்றே உதாசீனப்படுத்துதல்’. பிரிட்டிஷ் ராணுவவீரர்கள் நடந்துகொள்ளும் விதம், ஏழை எளிய மக்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வாழ்வாதாரமான குடிசைகள் அழிக்கப்படுவது, பாத்திரங்கள்  பறிமுதல் செய்யப்படுவது, பெண்களை நடுத்தெருவில் இழுத்து அவர்களுக்கு நோய் இருக்கிறதா என சோதனை செய்வதுஇவற்றை திலகரின் கேசரி கண்டிக்கிறது.

(Source: David Arnold, Colonizing the Body: State Medicine and Epidemic Disease in Nineteenth-century India, University of California Press, 1993, p.215 and http://www.tamilhindu.com/2014/07/tilakkillers/)

இப்படி எல்லாம் நடக்கும் கொடுமைகளைப் பார்த்தப் பெண்கள் தாங்கள் வீட்டின் உள்ளேயே பாதுகாப்பாகவே இருக்க விரும்பினர், ஆண்களும் அதையே செய்தனர். இப்படி சித்தரவதைகளுக்கும், கொடுமைகளுக்கும் உள்ளான பெண்கள் சமூகம், பின்பு மெல்ல மெல்ல எழக் காரணமாக இருந்தவர்கள் பலர். ராஜாராம் மோகன் ராய் , ஈஸ்வர சந்திர வித்யாசாகர் , தயானந்தா சரஸ்வதி, சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, பாரதியார் எனப் பலரின் தன்னலமற்ற உழைப்பு ,சேவை, சிந்தனை , செயல் ஆகியவற்றால் பெண்கள் சமூகம் முன்னேற ஆரம்பித்தது , பீடு நடை போட்டு தொடர்கிறது.     

இயல்பாகவே நம் பாரதப் பண்பாடு பெண் தன்மை கொண்டது, இங்கு இருக்கும் மலைகளும், நதிகளும், பெண்களின் பெயரையே தாங்கி நிற்கின்றன. இங்கு பெண் அடிமைப்படுத்தப்பட்டாள் என்பதை ஏற்கமுடியாது. ஓர் உயர்ந்த பண்பாட்டை உடைய மக்களை; பண்பாடற்ற கூட்டம் ஆக்கிரமிக்கும் பொழுது அங்கு முதலில் பாதிக்கப்படுவது பெண்கள் தான். அதுதான் நம் நாட்டின் அன்னிய படையெடுப்புகளின் பொழுது நடந்தது, (சில வருடங்களுக்கு முன் இலங்கையில் நம் தமிழ் பெண்களுக்கு நடந்தது என்ன - சிந்திக்க)

பாரத நாட்டில் பெண் என்பவள் கடவுளுக்கு நிகரானவள், பெண்ணிற்கே பாதுகாப்பு இல்லை என்றால் நாடு எப்படி முன்னேறும். நம் நாட்டில் பெண் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டதற்குக் காரணம் அன்னியர்களே தவிர நம் பாரத கலாச்சாரமல்ல. இதை இன்றைய நவ நாகரிக யுவனும்-யுவதியும் புரிந்து கொள்ள வேண்டும்.

"பெண்மையைப் போற்றும் பாரதம் ;
என்றும் அவளைத் தூற்றியதில்லை"      

"ஒரு பெண் கண்ணீர் சிந்தும் வீட்டில் தெய்வங்கள் மகிழ்ச்சி அடைவதில்லை" -  சுவாமி விவேகானந்தர்

2 comments:

  1. நல்ல கட்டுரை. பாராட்டுக்கள்.

    ReplyDelete