Tuesday 14 July 2015

"சனாதன தர்மம் - 2" -"வசுதைவ குடும்பகம்"- Vasudhaiva Kutumbakam (உலகே ஒரு குடும்பம்) - அ.பரிவழகன்

 Vasudhaiva Kutumbakam
இதைச் செய் ; இதுதான் சரி ; இது மட்டுமே உண்மை; இவரே கடவுள் ; இது ஒன்றே வழி; என்று யாரையும் வற்புறுத்தியது இல்லை நம் சனாதன தர்மம். உன்னுடைய விருப்பத்திற்கே அனைத்தையும் விட்டு விடுகிறது. நீயே உன் இஷ்ட தெய்வத்தை ; நீயே உன் விருப்பமான வழிபாட்டு முறையை தேர்வு செய்து கொள்  என்கிறது.

எந்த ஒரு அதிகார பீடமோ ; ஒரு குடையின் கீழ் அனைவரும் வர வேண்டும் என்ற கட்டளையோ இங்கு கிடையாது , உன் விருப்பத்திற்கு எத்தனை கடவுளை வேண்டுமானாலும் வணங்கலாம். பரந்து பட்ட விருப்பத்தேர்வை இது தருகிறது. ஞான நூல்களுக்கோ; உடல்-ஆன்மா சார்ந்த விளக்கங்களுக்கோ; உயரிய கோட்ப்பாடுகளுக்கோ இங்கு பஞ்சமேயில்லை.

வேதங்கள் ; வேதாந்தங்கள்; இதிகாசங்கள் ; புராணங்கள்; புனிதர்களின் வாழ்க்கை முறைகள்; தெய்வீக மனிதர்களின் - மனித தெய்வங்களின் உயரிய வாழ்வியல் தத்துவங்கள்;கலாச்சார வலிமை ; பண்பாட்டுச்செழுமை ; பெண்மையின் பெருமை; நாகரிகத்தின் வல்லமை ; அறிவியலின் அரசாட்சி ; கணிதவியலின் கட்டுமானம் ; மன்னர்களின் மான்பு ; மக்களின் பண்பு ; அரசியலில் நேர்மை என எத்தனையோ எண்ணிலடங்காத வல்லமை பெற்றும் தன் கலாச்சாரத்தை ; தன் தர்மத்தைப் பரப்புவதற்காக பிற தேசங்களை ; மற்ற நாடுகளைஆக்கிரமிக்காத, கைப்பற்றாத  உயரிய ; புனித ஆன்மா நம் பாரதத் தாய் !” நாம் இதுவரையில் மதத்திற்காக ; பணத்திற்காக ; அதிகாரத்திற்காக ; நிலத்திற்காக எந்த நாட்டையும் ஆக்கிரமித்தது கிடையாது.

இந்த தேசத்தின் அடி நாதமாக விளங்குவது "ஆன்மீக வாழ்வே" ; ஆன்மீகம் தான் மக்களை ஒன்றிணைக்கிறது, சனாதன தர்மத்தை புறக்கணித்து விட்டு இங்கு எதையும் செய்ய முடியாது என்கிறார் சுவாமி விவேகானந்தர். இந்த அற்புத தர்மமானது நமக்கு மிகப் பரந்த மனப்பான்மையை வழங்கி இருக்கிறது; அனைத்து மதங்களையும் ; அனைத்து விதமான வழிபாட்டு முறைகளையும் அரவணைத்துக் கொள்ளும் ஓர் உயரிய நேர்மறையான பலத்தை நமக்கு அளிக்கிறது. எனவே தான் நாம்

"வசுதைவ குடும்பகம்" (உலகே ஒரு குடும்பம்)- (மகோ உபநிடதம்) Mahopanishad VI.71-73;
"யாதும் ஊரே யாவரும் கேளீர்-கனியன் பூங்குன்றனார்"; 
"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்-திருமூலர்"     
''உலகம் யாவையும் தாமுளவாக்களும்-கம்பர்"
"யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்றோம்  

தான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ; தொழிலும் ; கடவுளை இணைத்து ,தெய்வீகத்தைத் துணைக்கு அழைத்துச் செயல் செய்யும் கலாச்சாரம் நம்முடையது. புதியதாக வாங்கிய கணிணியையோ ; வாகனத்தையோ தொட்டு வணங்கும் பழக்கம் நம்முடையது. இது மூட நம்பிக்கையல்ல, நமக்கு உதவும் பொருட்களுக்கு நாம் தரும் மரியாதை. ஆயுத பூஜையின் நோக்கம், நமக்குப் பயன்படும் அனைத்துப் பொருட்களையும் மதிப்பது; வணங்குவது

"உயிரினங்களை மட்டுமல்ல ; உயிரற்ற பொருட்களையும் மதிக்கும் கலாச்சாரம் இது"

மாத,பிதா,குரு,தெய்வம் என்ற முறையில் வந்து அனைத்தையும் வணங்கும் நாடு இது; அனைவரையும் நேசிக்கவும் ; அரவணைக்கவும் இங்கு எந்தத் தடையும் இல்லை. இங்கு உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு மனிதர்கள் தான் காரணமே தவிர ; இந்த கலாச்சரம் அல்லபுனிதமான ஜீவா நதி நம் சனாதன தர்மம் !

No comments:

Post a Comment