Wednesday 25 June 2014

தமிழ் நம் அடையாளம்! ஹிந்தி இன்றைய தேவை !

அந்நிய மொழியாகிய ஆங்கிலத்திற்கு நாம் தரும் முக்கியதுவத்தை ஏன் நம் நாட்டு ஹிந்தி மொழிக்குத் தரக்கூடாது ? இந்திய மக்களாகிய நாம் நம் இந்தியாவின் பிற பகுதிகளில் பெருவாரியாக மக்கள் பேசும் ஒரு மொழியை ஏன் கற்கக் கூடாது ? பிற மாநிலங்களுக்கு தொழில், கல்வி, பயணம் ரீதியாக செல்லும் நமக்கு ஹிந்தி பயன்படும். இன்று தமிழ்நாட்டில் படித்த மாணவர்கள்,இளைய சமுதாயத்தினர் தமிழில் எழுதுவதில்லை, பேசுவதில்லை, காரணம் ஆங்கிலமோகம் ! ஒரு அந்நிய மொழியின் (ஆங்கிலம்) மீது மோகம் வரலாம்,அதை யாரு கேட்பதில்லை ! நாம் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல, ஒரு மொழியைக் கற்பதனால் இன்னொரு மொழி அழியும் என்பதும் தவறு. 

பல மொழி பேசும் மக்கள் வாழும் நாட்டில் ஒரு மொழியின் மூலம் மட்டும் அரசு, தன் அதிகாரப்பூர்வ செய்திகளை, தன் அரசு நடவடிக்கைகளை மக்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவிக்க,வெளியிட நினைப்பது தவறு. இணைப்பு மொழியாக பயன்படும் ஆங்கிலம் மூலம் அரசு தன் செய்திகளை தெரிவிக்கலாம்.

அவரவர்க்கு அவரவர் மொழி முக்கியம் !

தொன்மை வாய்ந்த தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் ! அரசியல் சாசனத்தின் 8-ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், சமூக வலைதளங்களில் அனைத்து ஆட்சி மொழிகளையும் பயன்படுத்துவதை ஊக்குவிக்க முடியும்.